டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில்தேசிய அறிவியல் தினம்


டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில்தேசிய அறிவியல் தினம்
x

டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்பட்டது.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்பட்டது. கல்லூரி முதல்வர் வைஸ்லின் ஜிஜி தலைமை தாங்கினார். கணிதத்துறை தலைவர் வாசுகி வரவேற்று பேசினார்.

பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் பணிபுரிந்த விஞ்ஞானியும், வாழ்க்கை திறன்கள், மனிதவள பயிற்சியாளருமான டேனியல் செல்லப்பா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், ''மாணவர்கள்தான் எதிர்கால இந்தியாவின் பெருமை மற்றும் சொத்து. மாணவர்கள் தங்களது துறையில் பேரார்வத்துடன் செயலாற்றும்போது வெற்றி நிச்சயம். இந்தியாவின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு புதுமைகளை கண்டுபிடிக்க வேண்டும். மாணவர்கள் தங்களது லட்சியம், கண்டுபிடிப்புகள் குறித்து கனவு காண வேண்டும். மேலும் புதுமை, படைப்பாற்றல் மிக்கவர்களாக திகழ வேண்டும்'' என்றார்.

பின்னர் தனது புதிய கண்டுபிடிப்பான 'மண்ணில் இருந்து மின்சாரம்' என்ற எரிபொருள் குறித்து விளக்கி கூறினார். நிகழ்ச்சியில் பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை எந்திரவியல் பேராசிரியரும், கல்லூரி பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு அலுவலருமான பொன்னுகிருஷ்ணன், மின்னணு மற்றும் தொடர்பு துறை பேராசிரியர் டார்வின் ஆகியோர் செய்து இருந்தனர்.


Next Story