டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில்தொழில் முனைவோர் திறன் மேம்பாட்டு பயிற்சி பட்டறை


டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில்தொழில் முனைவோர் திறன் மேம்பாட்டு பயிற்சி பட்டறை
x
தினத்தந்தி 14 Oct 2023 12:15 AM IST (Updated: 14 Oct 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் தொழில் முனைவோர் திறன் மேம்பாட்டு பயிற்சி பட்டறை நடந்தது.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் துறை சார்பில், ஸ்பேஸ் மற்றும் ஐ.கியூ.ஏ.சி. பிரிவு, நியூ டெக்னாலஜி நிறுவனத்துடன் இணைந்து 'ஆண்ட்ராய்டு தொழில்நுட்பம் மற்றும் ஸ்மார்ட் சாதனங்கள் சேவை' குறித்த தொழில் முனைவோர் திறன் மேம்பாட்டு பயிற்சி பட்டறை 2 நாட்கள் நடந்தது. கட்டிடவியல் துறை தலைவர் தமிழரசன் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் வளன் அரசு வரவேற்று பேசினார். துறை தலைவர் பெனோ வாழ்த்தி பேசினார்.

கோவை நியூ டெக்னாலஜி இன்ஸ்டிடியூட் நிறுவனர் கிருஷ்ணகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஆண்ட்ராய்டு தொழில்நுட்பம் மற்றும் ஸ்மார்ட் சாதனங்கள் சேவை என்ற தலைப்பில் பயிற்சி வழங்கினார். நியூ டெக்னாலஜி நிறுவன தொழில்நுட்ப வல்லுனர்கள் கார்த்தி, வெங்கடேஷ் ஆகியோர் தொழில்நுட்ப கோளாறுகளை கண்டறிதல் மற்றும் பழுது நீக்குதல் குறித்து செயல்முறை விளக்க பயிற்சி அளித்தனர். இதில் மாணவ-மாணவிகள் பங்கேற்று பயனடைந்தனர். ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் வைஸ்லின் ஜிஜி வழிகாட்டுதலின்பேரில், பேராசிரியர்கள் செய்து இருந்தனர்.


Next Story