டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரியில்விளையாட்டு விழா
டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரியில் விளையாட்டு விழா நடந்தது.
தூத்துக்குடி
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரியில் 28-வது விளையாட்டு விழா நடந்தது. கல்லூரி முதல்வர் சுவாமிதாஸ் வரவேற்று பேசினார். டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரி முதல்வர் சாம்ராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விளையாட்டு விழாவை தொடங்கி வைத்து பேசினார்.
மாணவ-மாணவிகளுக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. மாணவர்கள் பிரிவில் பச்சை நிற அணியினரும், மாணவிகள் பிரிவில் சிவப்பு நிற அணியினரும் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றனர். மாணவி நான்சி சோனா நன்றி கூறினார். ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் சுவாமிதாஸ், உதவி பேராசிரியை சோபியா மற்றும் மாணவ-மாணவிகள் செய்து இருந்தனர்.
Related Tags :
Next Story