டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை


டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
x

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

புதுக்கோட்டை

இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி புதுக்கோட்டையை சேர்ந்தவர் ஆவார். கடந்த 2021-22-ம் ஆண்டிற்கான செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் இந்தியாவின் முதல் பெண் சட்டப்பேரவை உறுப்பினர், இந்திய பெண்கள் சங்கத்தின் முதல் தலைவர், தமிழ்நாட்டின் சமூக சீர்திருத்த பெண் மருத்துவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அம்மையாருக்கு புதுக்கோட்டையில் முழு உருவச்சிலை அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில், ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அம்மையாரின் முழு உருவ வெண்கலச்சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது. சென்னையிலிருந்து காணொலிக்காட்சி வாயிலாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதையொட்டி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலெக்டர் கவிதா ராமு பங்கேற்று காணொலியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தார். அதனை தொடர்ந்து திறந்து வைக்கப்பட்ட டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி சிலைக்கு கலெக்டர் கவிதா ராமு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் டாக்டர் முத்துராஜா எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சிக் குழுத்தலைவர் ஜெயலட்சுமி, புதுக்கோட்டை நகராட்சி தலைவர் திலகவதி செந்தில், துணை தலைவர் லியாகத் அலி, முன்னாள் அரசு வழக்கறிஞர் செல்லபாண்டியன், செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி மதியழகன், அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் பார்த்தசாரதி, உதவி மக்கள் தொடா்பு அலுவலர் பாரதி, கவிஞர் தங்கம் மூர்த்தி மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story