டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்


டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
x

நெல்லையில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது.

திருநெல்வேலி

நெல்லையில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது.

பிறந்த நாள் விழா

பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 87-வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. நெல்லை 'தினத்தந்தி' அலுவலகத்தில் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்துக்கு 'தினத்தந்தி' ஊழியர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

முன்னாள் மத்திய மந்திரி ஆர்.தனுஷ்கோடி ஆதித்தன் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மாநில பொருளாளர் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ., மாநில வக்கீல் அணி இணைத்தலைவர் மகேந்திரன், நெல்லை மாநகர் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன், துணைத்தலைவர்கள் மாரியப்பன், வெள்ளப்பாண்டியன், லெனின் பாரதி, பொதுக்குழு உறுப்பினர்கள் கவிபாண்டியன், உதயகுமார், சொக்கலிங்ககுமார், இசக்கி, மண்டல தலைவர்கள் ரசூல்மைதீன், பி.வி.டி.ராஜேந்திரன், அய்யப்பன், வட்டாரத்தலைவர் நளன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பா.ஜனதா

நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. தலைமையில் பா.ஜனதாவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மாவட்ட பொது செயலாளர் முத்து பலவேசம், நிர்வாகிகள் லட்சுமணன், பிரவீன் குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தி.மு.க.வினர் மானூர் ஒன்றிய செயலாளர் அன்பழகன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

அ.தி.மு.க.

அ.தி.மு.க.வினர் நெல்லை மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.பி.ஆதித்தன், கூட்டுறவு வங்கி தலைவர் பால்கண்ணன், ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் ஜெரால்டு, பொதுக்குழு உறுப்பினர் கங்கைவசந்தி, பகுதி செயலாளர்கள் ஜெனி, சிந்துமுருகன் மற்றும் வக்கீல் ஸ்ரீதர்ராஜன், வட்ட செயலாளர்கள் கணேசன், பாறைமணி, லட்சுமணன், ராமச்சந்திரன், அய்யப்பன், சங்கரபாண்டியன், நிர்வாகிகள் தங்கபிச்சையா, நந்தகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அ.தி.மு.க. கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பாப்புலர் முத்தையா தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. முன்னாள் எம்.எல்.ஏ. ரெட்டியார்பட்டி நாராயணன், முன்னாள் மண்டல தலைவர் தச்சை மாதவன், மாவட்ட துணைத்தலைவர் ஷேக் மன்சூர், முன்னாள் கவுன்சிலர்கள் வண்ணை கணேசன், முத்துராஜ், வட்டச் செயலாளர் வேல்முருகன், தொண்டன் ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

த.மா.கா.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் கிழக்கு மாவட்ட தலைவர் மாரிதுரை தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மாநில செயலாளர் சரவணன், சிறுபான்மை பிரிவு மாநில துணைத்தலைவர் ரமேஷ் செல்வன், மாவட்ட துணைத்தலைவர் சுப்பிரமணியன், சேகர், ஆதி, வீரவநல்லூர் பேரூராட்சி கவுன்சிலர்கள் ஆனந்தராமன், ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்து முன்னணியினர் மாநில செயலாளர் குற்றாலநாதன் தலைமையில் மாலை அணிவித்தனர். மாவட்ட தலைவர் சிவா, மாவட்ட செயலாளர் சுடலை உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

ச.ம.க.

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியினர் பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதி செயலாளர் ராகவன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நெல்லை பகுதி செயலாளர் அழகேசராஜா, மேலப்பாளையம் பகுதி நிர்வாகி ராஜ் கண்ணன், மாவட்ட இளைஞரணி துணைச்செயலாளர் வினோத், மாவட்ட பிரதிநிதி சரத்கண்ணன், நிர்வாகிகள் தவசிமுத்து, இளஞ்செழியன், அருள்மணி, செம்மொழி செல்வம், வினோத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

வக்கீல் ஜெயபாலன் தலைமையில் ஜெயச்சந்திரன், ஆனந்தமணி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

த.ம.மு.க.

தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தினர் மாவட்ட தலைவர் கண்மணி மாவீரன் தலைமையில் மாலை அனைத்து மரியாதை செலுத்தினார்கள். மாவட்ட செயலாளர் நாகராஜசோழன், தொழிற்சங்க தலைவர் மகேந்திரன், தொண்டரணி நிர்வாகி மகாராஜா பாண்டியன், நிர்வாகிகள் பரத், செல்வகுமரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மாவீரர் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்கத்தினர் தலைவர் மாரியப்ப பாண்டியன் தலைமையில் மாலை அணிவித்தனர். பொதுச்செயலாளர் பாலமுருகன், நிர்வாகிகள் தங்கவேலு, குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.நெல்லை சந்திப்பு பெருந்தலைவர் காமராசர் சிலை பராமரிப்பு குழுவினர் தலைவர் வித்யாகண்ணன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் செயலாளர் சரத்மணி, துணைத்தலைவர்கள் ரெட்டியார்பட்டி நளன், சிரில் ரத்தினம், நிர்வாகக்குழு உறுப்பினர் கப்பல்ராஜா, அருள்மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்திய நாடார்கள் பேரமைப்பினர்

இந்திய நாடார்கள் பேரமைப்பினர் நெல்லை மாவட்ட தலைவர் ஞானபிரகாசம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இதில் மாநில வக்கீல் பிரிவு இணைச்செயலாளர் வின்சர், தொழிற்சங்க செயலாளர் ஞானமைக்கேல், பொருளாளர் பெரியசாமி, இளைஞரணி செயலாளர் செல்வகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நெல்லை பத்திரிக்கையாளர் மன்றத்தினர் துணைத்தலைவர் பீர்முகைதீன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். துணைச் செயலாளர் சண்முகவேல், ராம்குமார், பாக்கியராஜ், ஆறுமுகம், விஜயகுமார், மாரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Next Story