இரட்டை மாட்டு வண்டி பந்தயம்


இரட்டை மாட்டு வண்டி பந்தயம்
x
தினத்தந்தி 23 Jan 2023 12:15 AM IST (Updated: 23 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

அய்யம்பாளையத்தில் இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

திண்டுக்கல்

பட்டிவீரன்பட்டி அருகேயுள்ள அய்யம்பாளையத்தில் தி.மு.க. சார்பில் அமைச்சர் இ.பெரியசாமியின் பிறந்தநாள் விழாவையொட்டி இரட்டை மாட்டு வண்டி பந்தய போட்டிகள் நேற்று நடைபெற்றன. இப்போட்டிகள் பெரியமாடு, நடுமாடு, சின்னமாடு என 3 பிரிவுகளாக நடந்தது.

இப்போட்டியில் திண்டுக்கல், தூத்துக்குடி, தேனி, புதுக்கோட்டை மதுரை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 60-க்கும் மேற்பட்ட இரட்டை மாட்டு வண்டிகள் பங்கேற்றன. போட்டியை திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் இ.பெ.செந்தில்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

போட்டியில் மாட்டு வண்டிகள் எல்லையை தொடுவதற்கு சீறிப்பாய்ந்து சென்றன. போட்டியை காண அய்யம்பாளையம், கணேசபுரம், கதிர்நாயக்கன்பட்டி, நெல்லூர், சித்தரேவு ஆகிய ஊர்களை சேர்ந்த பொதுமக்கள் சாலையின் இருபுறமும் திரண்டு நின்றனர். அவர்கள் ஆராவாரம் செய்து போட்டியை ரசித்து பார்த்தனர். வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்க பரிசு மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டன. அதில் பெரியமாடு பிரிவில் முதல் பரிசாக ரூ.1 லட்சமும், 2-ம் பரிசாக ரூ.75 ஆயிரமும், 3-ம் பரிசாக ரூ.50 ஆயிரமும், நடுமாடு பிரிவில் முதல் பரிசாக ரூ.75 ஆயிரமும், 2-ம் பரிசாக ரூ.50 ஆயிரமும், 3-ம் பரிசாக ரூ.40 ஆயிரமும், சின்னமாடு பிரிவில் முதல் பரிசாக ரூ.50 ஆயிரமும், 2-ம் பரிசாக ரூ.40 ஆயிரமும், 3-ம் பரிசாக ரூ.30 ஆயிரமும் வழங்கப்பட்டது.


Next Story