ஈரோடு ரெயில் நிலையத்தில் ஒய்யாரமாக ஓய்வெடுத்த நாய்கள்; பயணிகள் அச்சம்
ஈரோடு ரெயில் நிலையத்தில் ஒய்யாரமாக ஓய்வெடுத்த நாய்கள்; பயணிகள் அச்சம்
ஈரோடு
ஈரோடு வழியாக தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட ரெயில்கள் சென்று வருகின்றன. இதனால் பகல், இரவு என எப்போதும் ஈரோடு ரெயில் நிலையம் பரபரப்பாக காணப்படுகிறது. ரெயில் நிலையத்தின் நுழைவு பகுதியில் முன்பதிவு மையம் செயல்படுகிறது. தினமும் காலையில் தட்கல் டிக்கெட் எடுப்பதற்காக பயணிகள் ஏராளமானோர் வருகின்றனர். இதனால் பகலில் அங்கு கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.
இந்தநிலையில் நேற்று காலை பயணிகளின் இருக்கைக்கு அருகில் நாய்கள் ஒய்யாரமாக ஓய்வு எடுத்தன. அவசரமாக டிக்கெட் எடுத்துக்கொண்டு சென்ற பயணிகள் கவனிக்காமல், நாயை மிதிக்க முயன்றதால் அச்சம் அடைந்தனர். வெறிநாய்கள் கடித்து சிறுவர்-சிறுமிகள் படுகாயம் அடைந்த சம்பவம் பல இடங்களில் நடந்து இருப்பதால், ஈரோடு ரெயில் நிலையத்தில் நாய் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
Related Tags :
Next Story