டாக்டர்கள் உள்ளிருப்பு போராட்டம்


டாக்டர்கள் உள்ளிருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 30 Aug 2023 1:00 AM IST (Updated: 30 Aug 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல்

தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் சார்பில், திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் நேற்று உள்ளிருப்பு போராட்டம் நடந்தது. இதற்கு சங்க மாநில செயலாளர் டாக்டர் சீனிவாசன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் நாகராஜ், பொருளாளர் திருலோகச்சந்தர், துணைத்தலைவர் செந்தில்குமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதுகுறித்து சங்கத்தின் மாநில செயலாளர் கூறும்போது, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ கல்லூரிகள் என தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மருத்துவ நிலையங்களில் பணியாற்றும் டாக்டர்கள் ஊதிய உயர்வு, மேற்படிப்பு ஊக்கத்தொகை உள்பட பல்வேறு பணப்பயன்கள் வேண்டி கடந்த 4 ஆண்டுகளாக பலகட்ட போராட்டங்கள் நடத்தி வந்தோம். அதன் பயனாக கடந்த 2021-ம் ஆண்டு இதனை வழங்க அரசாணை வெளியிடப்பட்டது. அரசாணை வெளியிட்டு 2 ஆண்டுகளாகியும் இன்னும் பணப்பயன்கள் வழங்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அந்த வகையில், சுமார் ரூ.400 கோடிக்கு மேல் வழங்க வேண்டிய பணப்பயன்கள் நிலுவையில் உள்ளது. இதனை காலதாமதமின்றி உடனடியாக வழங்க வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனைகளில் டாக்டர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன்படி திண்டுக்கல்லிலும் மருத்துவ பணிகள் பாதிக்காதவாறு உள்ளிருப்பு போராட்டம் நடத்தப்பட்டது என்றார்.


Related Tags :
Next Story