மருத்துவர் சமூகத்தினர் அமைச்சரிடம் மனு


மருத்துவர் சமூகத்தினர் அமைச்சரிடம் மனு
x

மருத்துவர் சமூகத்தினர் அமைச்சரிடம் மனு அளித்தனர்.

மதுரை


தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச்சங்கம், முடி திருத்துவோர் நலச்சங்கம் சார்பில் மதுரை மாநகர் தலைவர் குலகன், செயலாளர் ராஜகுரு ஆகியோர், அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனிடம் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில், ஆந்திர மாநிலத்தில் மருத்துவர் சமூக மக்களுக்கு சட்ட பாதுகாப்பு வழங்கியதை போல தமிழக அரசும் சட்ட பாதுகாப்பு வழங்க வேண்டும். கோவில்களில் முடி எடுக்கும் தொழிலாளர்கள், நாதஸ்வர, தவில் இசைகலைஞர்களை, அரசு ஊழியர்களாக நியமிக்க வேண்டும். வருகிற சட்டமன்ற கூட்டத்தொடரில் இதுதொடர்பாக பேசி, மருத்துவர் சமூக மக்களின் வாழ்க்கையை மேம்பட வைக்க வேண்டும். மேலும், மருத்துவர் சமூகத்தை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருந்து மாற்றி, தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வகுப்பில் சேர்க்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது. அப்போது, மாநில இணை பொதுச்செயலாளர் ஞானசேகரன் , மாவட்ட அவைதலைவர் வீரக்குமார், தென்மண்டல இளைஞர் அணி அமைப்பாளர் பழனி, மாவட்ட பிரதிநிதி குறிஞ்சி உள்ளிட்ட பலர் இருந்தனர்.


Next Story