'ஆகாஷ்வாணி' என்றுதான் அழைக்க வேண்டும் என்பதா? கி.வீரமணி கண்டனம்


ஆகாஷ்வாணி என்றுதான் அழைக்க வேண்டும் என்பதா? கி.வீரமணி கண்டனம்
x

‘ஆகாஷ்வாணி' என்றுதான் அழைக்க வேண்டும் என்பதா? கி.வீரமணி கண்டனம்.

சென்னை,

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அனைத்திந்திய வானொலியை- 'ஆல் இண்டியா ரேடியோ' என்று காலங்காலமாய் பயன்படுத்திய சொற்களுக்கு பதில், இந்தி திணிப்பு வெறி காரணமாக 'ஆகாஷ்வாணி' என்ற சொல்லால் மட்டும்தான் அழைக்க வேண்டும் என்ற இந்தி திணிப்பு ஆணையை உடனடியாக மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும். இல்லை என்றால் இந்தி திணிப்புக்கு எதிராக தமிழ்நாடு முழுவதிலும் தொடர் கிளர்ச்சிகள் வெடிக்கும் என்பது உறுதி.

இந்தி திணிப்புக்கு எதிரான உணர்வு என்பது ஓர் எதிர்மறையான இயக்கம் அல்ல; மாறாக ஒரு வடமொழி - சமஸ்கிருத கலாசார பண்பாட்டைத் தடுத்து நிறுத்தும் உரிமைப் போர்; அறப்போராகும். மொழி உணர்வு நெருப்போடு விளையாட வேண்டாம் - மத்திய ஆட்சியாளர்கள் பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டும்!

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story