வி.சி.க என்றால் அர்த்தம் என்ன தெரியுமா..? - பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கடும் தாக்கு


வி.சி.க என்றால் அர்த்தம் என்ன தெரியுமா..? - பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கடும் தாக்கு
x
தினத்தந்தி 30 March 2024 12:41 PM IST (Updated: 30 March 2024 12:48 PM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்ற தேர்தலில் 400 தொகுதிகளில் வென்று பிரதமர் மோடி மீண்டும் ஆட்சி அமைப்பார்.

சிதம்பரம்.

நாடாளுமன்ற தேர்தலுக்கான சிதம்பரம் தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் கார்த்தியாயினியை ஆதரித்து பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது,

நான் முதலில் வி.சி.க என்றால் விடுதலை சிறுத்தைகள் கட்சி என்று தான் நினைத்தேன். இன்றைக்கு தான் தெரிகிறது வி.சி.க என்றால் விழுப்புரம், சிதம்பரம் கட்சி என்று. வி.சி.க தலைவர் திருமாவளவன் சொல்வது பொய்யான சமூக நீதி.

நாடாளுமன்ற தேர்தலில் 400 தொகுதிகளில் வென்று பிரதமர் மோடி மீண்டும் ஆட்சி அமைப்பார். தமிழகத்தில் பொய்யான மாயையை எதிர்கட்சியினர் உருவாக்கி உள்ளனர். திருமாவளவனுக்கு ஓட்டு போட்டால் கடந்த 5 ஆண்டுகளில் என்ன நடந்ததோ அதே தான் மீண்டும் நடக்கும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story