"பட்டாசு கழிவுகளை பிற குப்பைகளுடன் சேர்க்க வேண்டாம்" - பொதுமக்களுக்கு சென்னை மாநகராட்சி அறிவுறுத்தல்


பட்டாசு கழிவுகளை பிற குப்பைகளுடன் சேர்க்க வேண்டாம் - பொதுமக்களுக்கு சென்னை மாநகராட்சி அறிவுறுத்தல்
x

தூய்மைப் பணியாளர்களிடம் பட்டாசு கழிவுகளை தனியாக ஒப்படைக்குமாறு சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.

சென்னை,

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் சூழலில், பட்டாசு விற்பனை தற்போது களைகட்டியுள்ளது. வாடிக்கையாளர்களை கவரும் வகையில் சந்தையில் பல்வேறு புதிய வகை பட்டாசுகள் அறிமுகமாகியுள்ளன. இவ்வாறு வகை வகையான பட்டாசுகளை வெடித்து மகிழ்வது போலவே, பட்டாசு கழிவுகளை முறையாக அகற்றுவதும் முக்கியமான பணியாகும்.

அதிக குப்பைகளை ஏற்படுத்தும் பட்டாசுகள், சரியாக வெடிக்காத நிலையில் உள்ள பட்டாசுகள், மத்தாப்பு கம்பிகள் என பட்டாசு குப்பைகள் வீதிகள் தோறும் பெருமளவில் சேர்கின்றன. அவற்றை தனியாக சேர்த்து முறைப்படி அப்புறப்படுத்துவதில் தூய்மைப் பணியாளர்கள் மட்டுமின்றி பொதுமக்களின் பங்களிப்பும் அவசியமாகிறது.

அந்த வகையில் பட்டாசு குப்பைகளை அப்புறப்படுத்துவது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், எரிந்த நிலையிலும், எரியாத நிலையிலும் உள்ள பட்டாசுகள், பட்டாசு குப்பைகள் மற்றும் எஞ்சிய பட்டாசுகளை பிற குப்பைகளுடன் சேர்க்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இத்தகைய பட்டாசு கழிவுகளை நாள்தோறும் குப்பைகளைப் பெற வரும் தூய்மைப் பணியாளர்களிடம் தனியாக ஒப்படைக்குமாறும் பொதுமக்களுக்கு சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.


Next Story