தி.மு.க. இளைஞரணி திராவிட மாடல் பயிற்சி பாசறை; அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு


தி.மு.க. இளைஞரணி திராவிட மாடல் பயிற்சி பாசறை; அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு
x

விளாத்திகுளத்தில் தி.மு.க. இளைஞரணி திராவிட மாடல் பயிற்சி பாசறை நடந்தது. இதில் அமைச்சர் கீதாஜீவன் கலந்துகொண்டு பேசினார்.

தூத்துக்குடி

எட்டயபுரம்:

விளாத்திகுளத்தில் தி.மு.க. இளைஞரணி திராவிட மாடல் பயிற்சி பாசறை நடந்தது இதில் அமைச்சர் கீதாஜீவன் கலந்துகொண்டு பேசினார்.

பயிற்சி பாசறை

விளாத்திகுளத்தில், தி.மு.க. இளைஞரணி சார்பில் திராவிட பயிற்சி பாசறை நடந்தது. நிகழ்ச்சிக்கு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் தலைமை தாங்கினார். தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் மதியழகன் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்துகொண்டு பேசினார்.

அவர் பேசியதாவது:-

திராவிட கழகம் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர் வரை நமது கொள்கைகளை, சித்தாந்தங்களை சட்டமாக்கினார்கள். திட்டமாக்கினார்கள். அரசு ஆணையாக பிறப்பிக்கப்பட்டுதான் இன்று இவ்வளவு முன்னேற்றங்கள் வந்திருக்கிறது. தமிழகம் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக இருப்பதற்கு காரணம் திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் தான்.

அதன்பின் வந்த முதல்-அமைச்சர்கள் அனைவரும் அந்த கொள்கையை பின்பற்றினர். இதையெல்லாம் நம் இளைஞர்களுக்கு சொல்லித்தர வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கலந்துகொண்டவர்கள்

நிகழ்ச்சியில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் இம்மானுவேல், பொறுப்பாளர் ஸ்ரீதர், மாநில செய்தி தொடர்பு இணைச் செயலாளர் தமிழன் பிரசன்னா மற்றும் ஒன்றிய, நகர நிர்வாகிகள், பேரூராட்சி தலைவர்கள், இளைஞர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story