பாஜக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை- திமுக மகளிர் உரிமை மாநாட்டில் கனிமொழி எம்.பி பேச்சு


பாஜக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை- திமுக மகளிர் உரிமை மாநாட்டில் கனிமொழி எம்.பி பேச்சு
x
தினத்தந்தி 14 Oct 2023 7:15 PM IST (Updated: 14 Oct 2023 7:41 PM IST)
t-max-icont-min-icon

பாஜக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று திமுக மகளிர் உரிமை மாநாட்டில் கனிமொழி எம்.பி பேசினார்.

சென்னை,

திமுக மகளிர் உரிமை மாநாட்டில் அவர் பேசி வருவதாவது,

பாஜக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. மேலும் மகளிர் இட ஒதுக்கீடை பாஜக நடைமுறைபடுத்தாது . புதுச்சேரியில் பட்டியல் இன பெண் என்பதால் அமைச்சரே ராஜினாமா செய்யும் நிலை உள்ளது. மேலும் பாஜக கொண்டு வந்துள்ள மகளிர் இட ஒதுக்கீடு 50 ஆண்டுகள் ஆனாலும் நடைமுறைக்கு வராது.

மத்தியரசின் கொள்கை முடிவுகளில் மகளிருக்கு இடமில்லை. இந்த மாநாட்டில் அறிவொளி பெற்ற தீபங்களாக மகளிர் அணியினர் பங்கேற்று உள்ளனர். ஒடுக்கப்பட்ட சமூக பெண் என்பதால் குடியரசு தலைவரும் அவமதிக்கப்படுகிறார். மணிப்பூரில் பெண்களுக்கு மிகப்பெரிய அளவில் கொடுமைகள் நடந்துள்ளன. மேலும் டெல்லியில் போராடிய விளையாட்டு வீராங்கனைகளுக்கு இந்த மத்திய பாஜக ஆட்சியில் நீதி கிடைக்கவில்லை.

மேலும் பேசிய அவர், திமுக தலைவரும் முதல்-அமைச்சருமான மு.க ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான அரசு பெண்களுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. இந்தியாவில் முதல்முறையாக தமிழ்நாட்டில்தான் பெண்களுக்கு காவல்துறையில் இடமளிக்கப்பட்டது. மேலும் படிக்கும் ஆர்வமுள்ள பெண்களை கைதூக்கி விட நிதியுதவி அளித்து வருகிறது திமுக அரசு. மேலும் பெண்கள் முன்னேற்றத்திற்காக மகளிர் உரிமை தொகை வழங்கியுள்ளது, இதுதான் திராவிட மாடல் ஆட்சி. தமிழ்நாட்டில்தான் 11 பெண் மேயர்கள் உள்ளனர், என்று அவர் கூறினார்.

மத்திய பாஜக ஆட்சியில் குடியரசு தலைவராக இருக்கட்டும், விளையாட்டு வீராங்கனைகளாக இருக்கட்டும், சாமானிய பெண்களாக இருக்கட்டும் எந்த நிலை பெண்களுக்கும் நீதி கிடைக்காது, என்றும் அவர் பேசினார்.


Next Story