தி.மு.க. சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி


தி.மு.க. சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி
x
தினத்தந்தி 6 July 2023 12:15 AM IST (Updated: 6 July 2023 5:15 PM IST)
t-max-icont-min-icon

கீழப்பாவூரில் தி.மு.க. சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.

தென்காசி

பாவூர்சத்திரம்:

தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கீழப்பாவூரில் பேரூர் தி.மு.க. சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா பெரியார் திடலில் நடைபெற்றது. பேரூர் செயலாளர் ஜெகதீசன் தலைமை தாங்கினார். பேரூராட்சி தலைவர் பி.எம்.எஸ்.ராஜன், மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் கா.ராஜாமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் வக்கீல் பொ.சிவபத்மநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, கலைஞரின் 100-வது பிறந்த தினத்தை குறிப்பிடும் வகையில் 100 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story