"தி.மு.க. கூட்டணி 40 தொகுதிகளிலும் அமோக வெற்றி பெறுவது உறுதி"-அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பேச்சு
வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணி 40 தொகுதிகளிலும் அமோக வெற்றி பெறுவது உறுதி என்று அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பேசினார்.
வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணி 40 தொகுதிகளிலும் அமோக வெற்றி பெறுவது உறுதி என்று அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பேசினார்.
தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம்
தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளராக சுரண்டை நகர செயலாளர் ஜெயபாலன் நியமிக்கப்பட்டார். அவர் மாவட்ட பொறுப்பாளராக பொறுப்பேற்ற பின்னர் முதலாவதாக மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம், இலஞ்சியில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.
மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன் புதிய நிர்வாகிகளை அறிமுகம் செய்து, அனைவரையும் வரவேற்று பேசினார். கூட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தி.மு.க. கூட்டணி வெற்றி உறுதி
வருகிற நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெறுவது உறுதி. இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முழு நம்பிக்கையுடன் உறுதியாக இருக்கிறார். எனவே நாம் அனைவரும் ஒற்றுமையுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு மகத்தான வெற்றியை பெற உழைக்க வேண்டும். மாவட்ட பொறுப்பாளராக நியமித்துள்ள ஜெயபாலனுக்கு அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ., அவைத்தலைவர் சுந்தரமகாலிங்கம், முன்னாள் எம்.எல்.ஏ. பூங்கோதை, துணை செயலாளர் கனிமொழி, தென்காசி நகர செயலாளர் சாதிர், ஒன்றிய செயலாளர்கள் அழகுசுந்தரம், சீனித்துரை, தென்காசி யூனியன் தலைவர் ஷேக் அப்துல்லா, தலைமை செயற்குழு உறுப்பினர் செல்லத்துரை, பொதுக்குழு உறுப்பினர் சாமிதுரை, அரசு ஒப்பந்ததாரர் சண்முகவேலு, மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் சுரேஷ், முன்னாள் நகர்மன்ற தலைவி பானு ஷமீம், முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் ஷமீம் இப்ராகிம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.