தி.மு.க. தெருமுனை பிரசார கூட்டம்


தி.மு.க. தெருமுனை பிரசார கூட்டம்
x

நெல்லை சங்கர்நகரில் தி.மு.க. தெருமுனை பிரசார கூட்டம் நடந்தது.

திருநெல்வேலி

நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா மற்றும் தி.மு.க. அரசின் ஈராண்டு சாதனைகளை விளக்கும் வகையில் 100 தெருமுனை பிரசார கூட்டங்கள் நடத்த திட்டமிட்டப்பட்டு நடைபெற்று வருகிறது. அதன்படி சங்கர்நகரில் 17-வது தெருமுனை பிரசார கூட்டம் நடைபெற்றது. மத்திய மாவட்ட பொறுப்பாளர் டி.பி.எம்.மைதீன்கான், மாநில வர்த்தக அணி இணை செயலாளர் மாலைராஜா, மகளிர் தொண்டர் அணி மாநில துணை செயலாளர் விஜிலா சத்தியானந்த் உள்ளிட்டோர் பேசினார்கள். மாநில பேச்சாளர் தூத்துக்குடி சரத் பாலா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். முன்னதாக தாழையூத்து பஜாரில் நாரணம்மாள்புரம் பேரூராட்சி தலைவர் உமா மகேஸ்வரி தலைமையில் தெருமுனை பிரசார கூட்டம் நடைபெற்றது.

நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட பொறுப்பாளர் டி.பி.எம்.மைதீன்கான் தலைமை தாங்கினார். பாளையங்கோட்டை தொகுதி பொறுப்பாளர் ஹெலன் டேவிட்சன் கலந்துகொண்டு ஆலோசனைகள் வழங்கினார். கூட்டத்தில் மாநில வர்த்தகர் அணி இணை செயலாளர் மாலைராஜா, நெல்லை மாநகர தி.மு.க செயலாளர் சு.சுப்பிரமணியன், மேயர் பி.எம்.சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், வருகிற நாடாளுமன்ற தேர்தலையொட்டி பூத் கமிட்டி அமைப்பது தொடர்பாக விவாதித்து ஆலோசனைகள் நடத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில், வட்ட செயலாளர்கள் கூட்டம் நடத்துவது குறித்து தங்களுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்படுவதில்லை என்றும், நிர்வாகிகள் செயல்பாடு குறித்தும் குற்றம் சாட்டி பேசினார்கள். இதனால் கூட்டத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. பின்னர் நிர்வாகிகள் வட்ட செயலாளர்களின் கோரிக்கை, பிரச்சினைகள் குறித்து தீர்வு காணப்படும் என்று சமாதானப்படுத்தினர்.


Next Story