தி.மு.க. கையெழுத்து இயக்கம்


தி.மு.க. கையெழுத்து இயக்கம்
x

நெல்லையில் தி.மு.க. கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

திருநெல்வேலி

'நீட்' தேர்வுக்கு எதிராக தி.மு.க. சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக தி.மு.க. மற்றும் அதன் துணை அமைப்பான மாணவரணி, இளைஞர் அணி, மருத்துவ அணி சார்பில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கக்கோரி நேற்று தமிழகம் முழுவதும் கையெழுத்து இயக்கம் நடந்தது.

நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் பாளையங்கோட்டையில் கையெழுத்து இயக்கம் நடந்தது. மாவட்ட பொறுப்பாளர் டி.பி.எம்.மைதீன்கான் தலைமை தாங்கி, தொடங்கி வைத்தார். தலைமை கழக பேச்சாளர் சைதை சாதிக் கலந்து கொண்டு நீட் தேர்வின் பாதிப்புகள் குறித்து பேசினார். இதில் ஏராளமான தி.மு.க.வினர் கலந்துகொண்டு நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி ஜனாதிபதி அலுவலகத்துக்கு தபால் அனுப்பினர்.

நிகழ்ச்சியில் நெல்லை மாநகராட்சி மேயர் பி.எம்.சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, முன்னாள் எம்.எல்.ஏ. மாலைராஜா, மாநகர செயலாளர் சுப்பிரமணியன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் வில்சன் மணித்துரை, துணை அமைப்பாளர் முகமது மீரான் மைதீன், மாநகர இளைஞரணி அமைப்பாளர் கருப்பசாமி கோட்டையப்பன், துணை அமைப்பாளர் ஆறுமுகராஜா, மருத்துவ அணி அமைப்பாளர் கணேசராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story