தி.மு.க. அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம்


தி.மு.க. அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம்
x
தினத்தந்தி 11 May 2023 12:15 AM IST (Updated: 11 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சிவகிரி அருகே ராயகிரியில் தி.மு.க. அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.

தென்காசி

சிவகிரி:

சிவகிரி அருகே ராயகிரியில் வாசுதேவநல்லூர் வடக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் அரசின் 2 ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. வாசுதேவநல்லூர் யூனியன் தலைவரும், வாசுதேவநல்லூர் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன்.முத்தையா பாண்டியன் தலைமை தாங்கினார். ராயகிரி நகர செயலாளர் குருசாமி, மாநில மருத்துவரணி துணை அமைப்பாளர் டாக்டர் செண்பக விநாயகம், மாவட்ட துணைச் செயலாளர் மனோகரன், ராயகிரி நகரப்பஞ்சாயத்து தலைவர் இந்திரா பூசை பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் தமிழ்நாடு பாடநூல் நிறுவன தலைவரும், தி.மு.க. கொள்கை பரப்புச் செயலாளருமான திண்டுக்கல் ஐ.லியோனி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். சிவகிரி நகரப்பஞ்சாயத்து தலைவர் கோமதி சங்கரி சுந்தர வடிவேலு, வாசுதேவநல்லூர் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பூசை பாண்டியன், சங்கரன்கோவில் ஒன்றிய செயலாளர் மதி மாரிமுத்து, புளியங்குடி நகர செயலாளர் அந்தோணிசாமி, வாசுதேவநல்லூர் நகர செயலாளர் ரூபி பாலசுப்பிரமணியன், வாசுதேவநல்லூர் யூனியன் துணைத் தலைவர் சந்திரமோகன் மற்றும் பலர் கலந்து கொண்டு பேசினர். மாவட்ட முன்னாள் பொறுப்புக் குழு உறுப்பினர் விவேகானந்தன் நன்றி கூறினார்.


Related Tags :
Next Story