தி.மு.க. அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம்


தி.மு.க. அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம்
x

கடையநல்லூர் அருகே தி.மு.க. அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.

தென்காசி

கடையநல்லூர்:

கடையநல்லூர் ஒன்றிய தி.மு.க. சார்பில் வேலாயுதபுரத்தில் தி.மு.க. அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் சுரேஷ் தலைமை தாங்கினார். தலைமை செயற்குழு உறுப்பினர் செல்லத்துரை, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தமிழ்ச்செல்வி போஸ், நகராட்சி சேர்மன் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான், சுப்பம்மாள் பால்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கலை இலக்கிய அணி முத்துக்குமார் வரவேற்றார். அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர் சிங்கிலிபட்டி மணிகண்டன், அருணாச்சல பாண்டியன், யூனியன் துணை தலைவர் ஐவேந்திரன் தினேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story