தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை


தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை
x
தினத்தந்தி 17 April 2023 12:15 AM IST (Updated: 17 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

செஞ்சியில் தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை அமைச்சர் மஸ்தான் தொடங்கி வைத்தார்

விழுப்புரம்

செஞ்சி

செஞ்சி பேரூராட்சி சக்கராபுரத்தில் 17 மற்றும் 18-வது வார்டுகளில் தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இதற்கு செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் மஸ்தான் தலைமை தாங்கினார். செஞ்சி ஒன்றியக்குழு தலைவர் விஜயகுமார் முன்னிலை வகித்தார். நகர அவைத்தலைவர் பார்சு துரை வரவேற்றார். நிகழ்ச்சியில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு உறுப்பினர் சேர்க்கை முகாமை தொடங்கி வைத்து புதிய படிவங்களை வழங்கி பேசினார். அப்போது பேசிய அமைச்சர் செஞ்சிமஸ்தான் தந்தை பெரியார் அண்ணா வழியில் ஆட்சி செய்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கினார். அவரது வழியில் ஆட்சி செய்யும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி உத்தரவிட்டுள்ளார். அந்த வகையில் பெண் அடிமையை ஒழிக்க பாடுபட்டது தி.மு.க. பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த பெண்களுக்கு மானியம் பெற்று தந்து இன்று பெண்களின் பொருளாதாரம் உயர்ந்து வருகிறது. படித்த இளைஞர்கள் மற்றும் பெண்கள் தானாக முன்வந்து தி.மு.க.வில் இணைகிறார்கள் என்றார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட விவசாய அணி அஞ்சாஞ்சேரி கணேசன், பொதுக்குழு உறுப்பினர் மணிவண்ணன், அரசு வக்கீல் கிருஷ்ணன், வார்டு செயலாளர்கள் கமலநாதன், தனசேகரன், மாவட்ட பிரதிநிதி சர்தார், தொண்டரணி பாஷா, முன்னாள் கவுன்சிலர் ஜோலமாலினி துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story