தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை முகாம்
வள்ளியூரில் தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை முகாமை அமைச்சர் ராஜகண்ணப்பன் தொடங்கி வைத்தார்.
வள்ளியூர்:
வள்ளியூர் நகர தி.மு.க. சார்பில் நடந்த உடன்பிறப்பாய் இணைவோம் கழகத்தில் என்ற புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் வள்ளியூர் திருவள்ளுவர் கலையரங்கு திடலில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் இரா.ஆவுடையப்பன் தலைமை தாங்கினார்.
நெல்லை நாடாளுமன்ற உறுப்பினரும், தலைமை செயற்குழு உறுப்பினருமான சா.ஞானதிரவியம், கழக வர்த்தகர் அணியின் மாநில இணைச் செயலாளரும், தலைமை செயற்குழு உறுப்பினரும் ராதாபுரம் சட்டமன்ற தொகுதி பார்வையாளருமான வழக்கறிஞர் என்.தாமரைபாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வள்ளியூர் நகர செயலாளர் சேதுராமலிங்கம் வரவேற்றார்.
புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணியை தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் கதர் கிராமிய தொழில் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் வள்ளியூர் பேரூராட்சி தலைவர் ராதா ராதாகிருஷ்ணன், துணைத் தலைவர் கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
* களக்காட்டில் தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது. மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் மணிசூரியன் வரவேற்றார். அதனைதொடர்ந்து அமைச்சர் ராஜகண்ணப்பன் உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார். இதில் ஞானதிரவியம் எம்.பி., ஒன்றிய செயலாளர்கள் களக்காடு தெற்கு ஒன்றிய செயலாளர் மற்றும் களக்காடு நகராட்சி துணைத்தலைவருமான பி.சி.ராஜன், வடக்கு ஒன்றிய செயலாளர் செல்வகருணாநிதி, நாங்குநேரி மேற்கு சுடலைக்கண்ணு, ஒன்றிய துணை செயலாளர் கருப்பசாமி பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.