"மகளிர் இட ஒதுக்கீடு பற்றி பேச திமுகவுக்கு தகுதி இல்லை" - அண்ணாமலை


மகளிர் இட ஒதுக்கீடு பற்றி பேச திமுகவுக்கு தகுதி இல்லை - அண்ணாமலை
x

மகளிர் இட ஒதுக்கீடு பற்றி பேச திமுகவுக்கு தகுதி இல்லை என்று பாஜக தலைவர் அண்ணாமலை கூறினார்.

கோவை,

கோவையில் பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

மகளிர் இட ஒதுக்கீடு குறித்து பேசுவதற்கு திமுகவுக்கு எந்த வித தகுதியுமில்லை. காங்கிரஸ் தங்களது கட்சியை வளர்ப்பதை விட திமுகவை வளர்ப்பதில் குறிக்கோளாக உள்ளது. மகளிருக்கு பாதுகாப்பு இல்லாமல், வெறும் விளம்பரத்திற்காக மகளிர் உரிமை மாநாடு எனும் நாடகத்தை நடத்துவதால் என்ன பயன்?. விளையாட்டை விளையாட்டாக பார்க்க வேண்டும் என அமைச்சர் உதயநிதி தெரிவித்ததால், தர்மத்தை தர்மமாக பார்க்க வேண்டும்; அவர் ஏன் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என கூறினார்?.

ஒற்றை ஆட்சி குறித்து கானல் நீர்போல் ஒரு கனவு கண்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பயந்து கொள்கிறார். தமிழக சட்டசபையில் சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் பேசும்போது மைக் நிறுத்தப்பட்டுள்ளது; சபாநாயகர் தங்களை சுய பரிசோதனை செய்து கொண்டு அனைவருக்கும் சமமான வாய்ப்பை வழங்க வேண்டும்.

கூட்டணி பேச்சு வார்த்தையை தேசிய தலைவர்கள்தான் மேற்கொள்வார்கள். தமிழகத்தில் பாஜகவை வளர்ப்பது மட்டுமே என் குறிக்கோள்; 5 மாநில தேர்தல்களில் இந்தியா கூட்டணி முழுவதும் சேர்ந்தாலும் பாஜகவை வீழ்த்த முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story