பதவியை காப்பாற்ற மத்திய அரசுடன் தி.மு.க இணக்கமாக உள்ளது - டி.டி.வி தினகரன் விமர்சனம்


பதவியை காப்பாற்ற  மத்திய அரசுடன் தி.மு.க இணக்கமாக உள்ளது - டி.டி.வி தினகரன் விமர்சனம்
x
தினத்தந்தி 23 Aug 2024 9:45 PM GMT (Updated: 23 Aug 2024 9:45 PM GMT)

2026 சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது என டி.டி.வி தினகரன் தெரிவித்தார்.

தஞ்சாவூர்,

தஞ்சாவூரில் நேற்று அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,

விஜய் கட்சியால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. அச்சப்பட வேண்டிய அவசியமும் இல்லை. மக்கள்தான் எஜமானர்கள். அவர்கள் தான் முடிவு செய்வார்கள். தமிழக கவர்னரின் பதவிக்காலம் முடிவடைந்தும் அது குறித்து இதுவரை தி.மு.க வாய் திறக்காதது ஏன் என்பது அனைவருக்கும் தெரியும்.தற்போது தி.மு.க. மத்திய அரசுடன் இணக்கமாக இருப்பது அவர்களது பதவியை காப்பாற்றிக் கொள்ளதான். அதற்காக எந்த நடவடிக்கையிலும் அவர்கள் ஈடுபடுவார்கள். மடியில் கனம் இருந்தால் பயம் இருக்கத்தான் செய்யும்.

பாலியல் வன்கொடுமை நாளுக்கு நாள் அதிகளவில் நடந்து வருகிறது. இதற்கு கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் புழக்கம்தான் முக்கிய காரணமாகும். ஆனால் தமிழகத்தில் போதை புழக்கத்தை கட்டுப்படுத்த தி.மு.க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் வருங்கால சன்னதியினர் பாதிக்கப்பட்டுள்ளனர்.தி.மு.க அரசு தேர்தல் கால எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை.

2026 சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.


Next Story