கட்சிக்காரர்களை பார்த்து பயப்படும் தி.மு.க. தலைவர் - எடப்பாடி பழனிசாமி


கட்சிக்காரர்களை பார்த்து பயப்படும் தி.மு.க. தலைவர் - எடப்பாடி பழனிசாமி
x

தனது கட்சிக்காரர்களை பார்த்து பயப்படுகின்ற நிலைமைக்கு தி.மு.க. தலைவர் ஸ்டாலின் போய்விட்டார் என எடப்பாடி பழனிசாமி கூறினார்.

சேலம்,

சேலம் மாவட்டம் ஆத்தூரில் மாற்றுக்கட்சியினர் அ.தி.மு.க.வில் இணையும் விழா நடைபெற்றது. விழாவில் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு பேசியதாவது:-

லஞ்சம் வாங்குவதில் முதன்மையாக தி.மு.க. அரசாக உள்ளது. கமிஷன், கலெக்‌ஷன், கரப்ஷன் இதுதான் இந்த ஆட்சியில் மக்கள் பார்த்து கொண்டிருக்கிறார்கள்.

முதன்மை, முதன்மை என்று தி.மு.க. சொல்வது லஞ்சம் வாங்குவதை தான் முதன்மை என்று சொல்கிறது.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுக்குழு கூட்டத்தில் நான் காலையில் கண்விழித்து பார்க்கின்றபோது ஏதாவது நடந்து விடுமோ என அச்சத்தில் தேடி பார்க்கிறேன் என்கிறார்.

அப்படினா அவருடைய நிலைமை பரிதாபமாக உள்ளது. அவர் கட்சிக்காரரை பார்த்து பயப்படுகின்றார். ஏனென்றால் தினந்தோறும் ஊடகங்களில் வருகின்ற செய்தியே தி.மு.க.காரர்கள் செய்கின்ற பிரச்சினை தான். அதை பார்த்து பயந்து நடுங்கி காலையில் எழுகின்றபோது எதுவுமே நடக்கக்கூடாது என வேண்டுகின்றேன், என அவரே கூறுகிறார். கட்சிக்காரர்களை பார்த்து பயப்படுகின்ற நிலைமைக்கு இன்று தி.மு.க. தலைவர் போய்விட்டார் என கூறினார்.


Next Story