விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பண பலம், அதிகார பலத்தில் திமுக வென்றுள்ளது: எடப்பாடி பழனிசாமி
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்ததை அதிமுக போட்டியிடாமல் புறக்கணித்தது.
சென்னை,
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் பண பலம், அதிகார பலத்தில் தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது. தமிழக விவசாயிகள், மக்களை பற்றி தி.மு.க. அரசுக்கு அக்கறை இல்லை. கூட்டணிதான் முக்கியம் என திமுக உள்ளது. விவசாயிகளுக்காக குரல் கொடுக்கவில்லை.
சென்னையில் குற்றவாளி மீதான என்கவுண்டரில் சந்தேகம் உள்ளது.ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சரண் அடைந்த திருவேங்கடத்தை என்கவுண்டர் செய்துள்ளனர். சரண் அடைந்தவரை அதிகாலையில் அழைத்து சென்று என்கவுண்டர் செய்துள்ளனர். கொலை குற்றவாளியை அவசர அவசரமாக அழைத்து செல்ல வேண்டிய அவசியம் என்ன? " இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story