வேங்கைவாடி கிராமத்தில் தி.மு.க. பொதுக்கூட்டம்


வேங்கைவாடி கிராமத்தில் தி.மு.க. பொதுக்கூட்டம்
x
தினத்தந்தி 30 Jun 2023 12:15 AM IST (Updated: 30 Jun 2023 1:51 PM IST)
t-max-icont-min-icon

வேங்கைவாடி கிராமத்தில் தி.மு.க. பொதுக்கூட்டம் நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி

தியாகதுருகம்,

தியாகதுருகம் வடக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் வேங்கைவாடி கிராமத்தில் நடைபெற்றது. இதற்கு வடக்கு ஒன்றிய செயலாளரும், தியாகதுருகம் ஒன்றியக்குழு துணைத் தலைவருமான நெடுஞ்செழியன் தலைமை தாங்கினார். கள்ளக்குறிச்சி மாவட்ட ஊராட்சி குழு தலைவர் புவனேஸ்வரி பெருமாள், தலைமை செயற்குழு உறுப்பினர் எத்திராசு, தியாகதுருகம் ஒன்றியக்குழு தலைவர் தாமோதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேங்கைவாடி கிளை செயலாளர் முத்து வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக தலைமை கழக பேச்சாளர் சைதை சாதிக் கலந்து கொண்டு கருணாநிதி ஆட்சியின்போது மக்களுக்காக செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்தும், தற்போதயை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தப்படும் எண்ணற்ற திட்டங்கள் குறித்தும் பேசினார்.

இதில் தியாகதுருகம் நகர செயலாளர் மலையரசன், பேரூராட்சி தலைவர் வீராச்சாமி, ஒன்றிய துணைச் செயலாளர்கள் பாலு, அமுதா தட்சிணாமூர்த்தி, பொருளாளர் முருகன், மாவட்ட பிரதிநிதிகள் நெடுஞ்செழியன், அப்துல் கபூர், இளைஞரணி நிர்வாகிகள் அப்போலியன், ஏழுமலை, பாக்யராஜ், கிளை செயலாளர் மஞ்சுநாதன், ஊராட்சி மன்ற தலைவர் ஆதிமூலம் மற்றும் வடக்கு ஒன்றிய அனைத்து பிரிவு சார்பு அணி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் கிளை செயலாளர் ராமலிங்கம் நன்றி கூறினார். முன்னதாக ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன் தியாகதுருகம் வடக்கு ஒன்றியத்தில் தி.மு.க. அரசு சார்பில் செயல்படுத்தப்பட்ட நலத்திட்டங்கள் குறித்த துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வினியோகம் செய்யும் பணியை தொடங்கி வைத்தார்.


Next Story