தி.மு.க. பொதுக்கூட்டம்
தென்காசியில் தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது.
தென்காசி நகர தி.மு.க. சார்பில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா நலத்திட்ட உதவிகள் வழங்குதல் மற்றும் பொதுக்கூட்டம் புதிய பஸ் நிலையம் அருகில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகரச் செயலாளரும், தென்காசி நகர்மன்ற தலைவருமான சாதிர் தலைமை தாங்கினார். நகரப் பொருளாளர் சேக் பரீத், மருத்துவ அணி டாக்டர் மாரிமுத்து மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். நகர்மன்ற துணைத் தலைவர் கே.என்.எல்.சுப்பையா வரவேற்றார். வக்கீல் ரகுமான் சாதத் தொகுப்புரையாற்றினார்.
இந்த கூட்டத்தில் தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசினார். தலைமை கழக சட்டத்துறை துணை செயலாளர் சூர்யா வெற்றிகொண்டான், தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் சிவ பத்மநாதன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினார்கள். கூட்டத்தில் மாவட்ட அவை தலைவர் சுந்தர மகாலிங்கம், துணைச் செயலாளர் கனிமொழி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் செல்லத்துரை, பொதுக்குழு உறுப்பினர் சாமிதுரை, ஒன்றிய செயலாளர் சீனித்துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.
* செங்கோட்டையில் நகர தி.மு.க. சார்பில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 70-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. நகர செயலாளர் வழக்கறிஞர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். நகர அவைத்தலைவர் காளி, நகர துணை செயலாளர்கள் ஜோதிமணி, முத்து சரோஜா, ராஜா, மாவட்ட பிரதிநிதிகள் பாஞ்ச் பீர்முகம்மது, மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர பொருளாளர் தில்லை நடராஜன் வரவேற்று பேசினார். மாநில அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, மாநில சட்டப்பிரிவு துணை செயலாளர் சூர்யா வெற்றிகொண்டான், மாவட்ட செயலாளர் பொ.சிவபத்மநாதன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
மாவட்ட அவைத்தலைவர் சுந்தரமகாலிங்கம் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ஆறுமுகசாமி, சேக் தாவூது, சேசுராஜன், மாவட்ட துணை செயலாளர்கள் கென்னடி, கனிமொழி, மாவட்ட பொருளாளர் ஷெரிப், பொதுக்குழு உறுப்பினர்கள் ரஹீம், சாமித்துரை, ராஜேஸ்வரன், தமிழ்செல்வி, அருள், செங்கோட்டை ஒன்றிய செயலாளர் ரவிசங்கர், தென்காசி கிழக்கு ஒன்றிய செயலாளர் அழகு சுந்தரம், மேற்கு ஒன்றிய செயலாளர் திவான் ஒலி, கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய செயலாளர் சீனித்துரை, தென்காசி யூனியன் சேர்மன் ஷேக் அப்துல்லா உள்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட பிரதிநிதி சுப்பிரமணியன் நன்றி கூறினார்.