தி.மு.க. பொதுஉறுப்பினர்கள் கூட்டம்
சீர்காழி அருகே நிம்மேலியில் தி.மு.க. பொதுஉறுப்பினர்கள் கூட்டம் நடந்தது
சீர்காழி:
சீர்காழி அருகே நிம்மேலியில் சீர்காழி மேற்கு ஒன்றிய தி.மு.க. பொது உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் பிரபாகரன் தலைமை தாங்கினார். ஒன்றிய அவைத் தலைவர் வீரமணி, துணை செயலாளர்கள் முருகன், சசிகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் எம்.எல்.ஏ, பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் இளங்கோவன், முத்து மகேந்திரன், ஜி.என்.ரவி ஆகியோர் கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து பேசினர். தொடர்ந்து புதிய நிர்வாகிகள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர். இந்த கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் அலெக்சாண்டர், சீர்காழி நகர செயலாளர் சுப்பராயன், சீர்காழி கிழக்கு ஒன்றிய செயலாளர் பஞ்சு குமார், மாவட்ட கவுன்சிலர் விஜயேஸ்வரன், பொதுக்குழு உறுப்பினர் சாமிநாதன், பேரூர் கழக செயலாளர் அன்புச் செழியன், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் திட்டை ஊராட்சி மன்ற தலைவர் பெரியசாமி நன்றி கூறினார்.