தி.மு.க. நிர்வாகி குடும்பத்திற்கு நிதி உதவி


தி.மு.க. நிர்வாகி குடும்பத்திற்கு நிதி உதவி
x
தினத்தந்தி 14 Aug 2023 12:15 AM IST (Updated: 14 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தி.மு.க. நிர்வாகி குடும்பத்திற்கு நிதி உதவி வழங்கப்பட்டது.

தென்காசி

சுரண்டை:

சுரண்டை அருகே கல்லூத்து கிராமத்தில் தென்காசி தெற்கு மாவட்ட முன்னாள் தி.மு.க. தொண்டர் அணி அமைப்பாளரும், கழுநீர்குளம் கிராம பஞ்சாயத்து தலைவருமான மறைந்த கை.முருகன் படத்திறப்பு விழா நடந்தது. விழாவிற்கு கீழப்பாவூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் சிவன் பாண்டியன் தலைமை தாங்கினார்.

தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் வே.ஜெயபாலன் கலந்துகொண்டு, கை.முருகன் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து மாவட்ட தி.மு.க. சார்பில் ரூ.1 லட்சம் நிதி உதவியை குடும்பத்தினரிடம் நிர்வாகிகள் முன்னிலையில் வழங்கினார். முன்னதாக அவரது உருப்படத்தினை தென்காசி நகராட்சி தலைவர் சாதிர், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தமிழ்செல்வி போஸ், ஆலங்குளம் யூனியன் தலைவர் திவ்யா மணிகண்டன், ஆலடி எழில்வாணன் ஆகியோர் திறந்து வைத்தனர்.

மாவட்ட பொருளாளர் ஷெரீப், ஒன்றிய செயலாளர்கள் அன்பழகன், ஜெயக்குமார், செல்லதுரை, அழகு சுந்தரம், செயற்குழு உறுப்பினர் ஜேசுராஜன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ரமேஷ், கீழப்பாவூர் நகர பஞ்சாயத்து தலைவர் ராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story