நெல்லை மாநகராட்சி மேயர் மீது தி.மு.க. கவுன்சிலர்கள் பரபரப்பு புகார்


நெல்லை மாநகராட்சி மேயர் மீது தி.மு.க. கவுன்சிலர்கள் பரபரப்பு புகார்
x

நெல்லை மேயர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து 35 தி.மு.க. கவுன்சிலர்கள் இன்று திருச்சியில் முகாமிட்டுள்ளனர்.

நெல்லை,

நெல்லை மாநகராட்சியில் மொத்தம் 55 வார்டுகள் உள்ள நிலையில், கடந்த முறை நடைபெற்ற மாநகராட்சி தேர்தலில் 4 வார்டுகளில் அ.தி.மு.க.வும், மற்ற 51 வார்டுகளில் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளும் வெற்றி பெற்றன.

இதையடுத்து தி.மு.க. பெரும்பான்மை வெற்றியோடு மாநகராட்சியை கைப்பற்றி, தற்போது நெல்லை மாநகராட்சியின் மேயராக சரவணன் என்பவர் இருந்து வருகிறார். இதனிடையே நீண்ட நாட்களாக தொடரும் பல்வேறு சிக்கல்கள் குறித்து மாநகராட்சி மேயர் மீது தி.மு.க. கவுன்சிலர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

நெல்லை மாநகராட்சி பணிகளில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாகவும், பணமோசடி மற்றும் பொதுமக்கள் கோரிக்கைகள் நிறைவேற்ற முடியாமல் இருப்பதாகவும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து 35 தி.மு.க. கவுன்சிலர்கள் இன்று திருச்சியில் முகாமிட்டுள்ளனர்.

அவர்கள் இன்று காலை 11 மணிக்கு நகராட்சி துறை அமைச்சர் கே.என்.நேருவை சந்தித்து, மேயர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து அவர்கள் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோரையும் சந்தித்து முறையிட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.



Next Story