தி.மு.க. ஆலோசனை கூட்டம்


தி.மு.க. ஆலோசனை கூட்டம்
x
தினத்தந்தி 7 Aug 2023 12:30 AM IST (Updated: 7 Aug 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

சங்கரன்கோவிலில் தி.மு.க. ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

தென்காசி

சங்கரன்கோவில்:

தென் மண்டலத்துக்கு உட்பட்ட 19 தி.மு.க. மாவட்டங்களின் உள்ள வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி பாசறை கூட்டம் வருகிற 17-ந் தேதி ராமநாதபுரம் மாவட்டத்தில் நடக்கிறது. தென்காசி வடக்கு மாவட்டத்தை சேர்ந்த சங்கரன்கோவில் மற்றும் வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி முகவர்கள் இந்த பயிற்சி பாசறைக்கு செல்வதற்கான ஆலோசனை கூட்டம் சங்கரன்கோவிலில் நடைபெற்றது. வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசினார். அப்போது, அவர் பேசுகையில், மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள் 2 சட்டமன்ற தொகுதியிலும் உள்ள வாக்குச்சாவடி முகவர்களை அழைத்து வர வேண்டும். தலைமை கழக நிர்வாகிகள் ஒன்றிணைந்து செயல்பட்டு தென்காசி வடக்கு மாவட்டத்தில் இருந்து அனைத்து வாக்குச்சாவடி முகவர்களும் பயிற்சி பாசறையில் கலந்து கொள்ள வேண்டும்.

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நினைவு தினத்தை முன்னிட்டு விளையாட்டுப் போட்டிகள், கருத்தரங்கங்கள், கலைஞரின் சாதனை விளக்க கூட்டங்கள், ஒன்றிய நகர பேரூர் கழகங்களில் கழக கொடி ஏற்றுதல், கட்சி மூத்த முன்னோர்களுக்கு பொற்கிழி வழங்குதல், உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்றார்.

இதில் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் யூ.எஸ்.டி. சீனிவாசன், பரமகுரு, மாவட்ட அவைத்தலைவர் பத்மநாபன், மாவட்ட துணை செயலாளர்கள் ராஜதுரை, புனிதா, ஒன்றிய செயலாளர்கள் லாலாசங்கரபாண்டியன், கடற்கரை, பொன்முத்தையாபாண்டியன், பூசைபாண்டியன், ராமச்சந்திரன், மதிமாரிமுத்து, கிறிஸ்டோபர், சேர்மத்துரை, வெற்றி விஜயன், பொதுக்குழு உறுப்பினர்கள் வேல்சாமி பாண்டியன், சங்கரன்கோவில் மாரிச்சாமி, பராசக்தி, மகேஸ்வரி, வெள்ளத்துரை, நகர செயலாளர்கள் சங்கரன்கோவில் பிரகாஷ், புளியங்குடி அந்தோணிசாமி பேரூர் கழகச் செயலாளர்கள் ரூபி பாலசுப்பிரமணியன், மாரிமுத்து ஆகியோர் கலந்து கொண்டனர்.




Related Tags :
Next Story