தே.மு.தி.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
வள்ளியூரில் நெல்லை புறநகர் மாவட்ட தே.மு.தி.க. உட்கட்சி தேர்தல் தொடர்பாக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
திருநெல்வேலி
வள்ளியூர்:
நெல்லை புறநகர் மாவட்ட தே.மு.தி.க. உட்கட்சி தேர்தல் சம்பந்தமான நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் வள்ளியூரில் நடந்தது. மாவட்ட செயலாளர் விஜி வேலாயுதம் தலைமை தாங்கினார். மாவட்ட அவைத்தலைவர் சங்கர் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக நெல்லை மாவட்ட உட்கட்சி தேர்தல் ஆணையாளர் மாதவன் கலந்துகொண்டு உட்கட்சி தேர்தல் சம்பந்தமாக நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளையும், தேர்தலில் போட்டியிடுவதற்கான விண்ணப்ப படிவத்தையும் வழங்கினார். கூட்டத்தில், மாவட்ட துணைச் செயலாளர் ராணி, தலைமை செயற்குழு உறுப்பினர் வெள்ளத்துரை, பொதுக்குழு உறுப்பினர் பாபு இசக்கிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story