மாணவிகளுக்கு தீபாவளி புத்தாடை
தூத்துக்குடி பள்ளியில் மாணவிகளுக்கு தீபாவளி புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
தூத்துக்குடி பாரதியார் வித்யாலயம் பள்ளியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவிகளுக்கும் தீபாவளி புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி மாவட்ட சமூகநல ஒருங்கிணைந்த சகி மைய நிர்வாகி ஷெலின் ஜார்ஜ் தலைமை தாங்கி புத்தாடை வழங்கி பேசினார். அப்போது அவர், பெண்களுக்கு அரசாங்கத்திடம் இருந்து கிடைக்கும் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்தும், பெண் கல்வியின் முக்கியத்துவம், பெண்கள் பிரச்சினைகளுக்கு எவ்வாறு தீர்வு காணலாம் என்பது குறித்தும், பெண்களுக்கு பிரச்சினை எனில் 181 எண்ணை அழைக்கலாம் என்றும் மாணவிகளுக்கு விளக்கி கூறினார்.
தொடர்ந்து அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் தீபாவளி இனிப்பை முதுகலை ஆசிரியை சங்கரி என்ற ரேவதி வழங்கினார். நிகழ்ச்சியில் பள்ளி நிர்வாகக்குழு உறுப்பினர் ஏ.பி.சி.வீ.கணபதி, தலைமை ஆசிரியர் தட்சிணாமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.