மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு
பூதூர் ஊராட்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு செய்தார்.
வேலூர்
வேலூர் மாவட்டம், ஊசூர் அடுத்த பூதூர் ஊராட்சி கோவிந்தரெட்டிபாளையத்தில் உள்ள ரேஷன் கடையில் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி நேற்று திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது பொதுமக்களுக்கு வழங்கப்படும் பொருட்கள் சரியான முறையில், தரமாக உள்ளதா என அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இதனை தொடர்ந்து கோவிந்தரெட்டிபாளையம் மற்றும் இருளர் காலனியில் உள்ள அங்கன்வாடி மையம், புலிமேடு பகுதியில் உள்ள அரசு நிலத்தை மேய்ச்சல் வகைப்பாடாக மாற்றவும் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது அணைக்கட்டு தாசில்தார் ரமேஷ், மண்டல துணை தாசில்தார் சுதா, வருவாய் ஆய்வாளர் ஜெயந்தி, கிராம நிர்வாக அலுவலர் சங்கர்தயாளன் ஆகியோர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story