வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு


வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
x

வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு செய்தார்.

அரியலூர்

அரியலூர் மாவட்டத்தில் தமிழக அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், எரிசக்தி துறை அரசு கூடுதல் தலைமை செயலாளருமான ரமேஷ் சந்த் மீனா, கலெக்டர் ரமணசரஸ்வதி முன்னிலையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் செந்துறையில் கலைஞரின் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை சார்பில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தரிசு நில தொகுப்பினை ஆய்வு செய்து சாகுபடி செய்யப்பட்டுள்ள வேளாண் பயிர்கள் குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்து, அவர்களுக்கு வேளாண் இடுபொருட்களை வழங்கினார். தொடர்ந்து, செந்துறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆய்வு செய்தார். பின்னர் அவர் சென்னிவனத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணற்றையும், வேளாண் பொறியியல் துறையின் சார்பில் ரூ.9.4 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறையும் பார்வையிட்டார். ரெட்டிப்பாளையம் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி துறையின் சார்பில் ரூ.7.85 லட்சத்தில் கிடைமட்ட வடிகட்டியுடன் கூடிய வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணியையும், ரூ.5.3 லட்சத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் குட்டை மேம்படுத்துதல் பணியையும், ரூ.6.89 லட்சத்தில் வி.கைகாட்டி திருப்பதி நகரில் அமைக்கப்பட்டுள்ள சிமெண்டு சாலையையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும், அஸ்தினாபுரத்தில் ரூ.5.12 லட்சத்தில் உலர்களம் அமைத்தல் பணியையும், வாலாஜநகரத்தில் ரூ.28 லட்சத்தில் பெரியார் ஈ.வெ.ரா. ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கட்டிட கட்டுமான பணியையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.


Next Story