மாவட்ட அளவிலான செஸ் போட்டி


மாவட்ட அளவிலான செஸ் போட்டி
x

விழுப்புரத்தில் மாவட்ட அளவிலான செஸ் போட்டி நடந்தது.

விழுப்புரம்

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்ட பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு விழுப்புரம் மாவட்ட அளவிலான செஸ் போட்டிகள் விழுப்புரம் அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா தொடங்கி வைத்து பார்வையிட்டார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா, மாவட்ட கல்வி அலுவலர் (பொறுப்பு) காளிதாஸ், முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் பெருமாள், அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சசிகலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இப்போட்டியில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் மண்டல அளவிலான போட்டியில் வெற்றி பெற்ற 250-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்துகொண்டு ஆர்வமுடன் விளையாடினர். இதில் வெற்றி பெற்ற 4 மாணவர்கள், சென்னைக்கு அழைத்துச்செல்லப்பட்டு தமிழக முதல்-அமைச்சருடன் விமானம் மூலம் பெங்களூரு அழைத்துச்செல்லப்பட உள்ளனர். பெங்களூருவில் உள்ள அருங்காட்சியகத்தை அந்த மாணவர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட உள்ளார். அதன் பின்னர் மீண்டும் விமானம் மூலம் அவர்கள், சென்னை திரும்புகின்றனர். மேலும் மாவட்ட அளவில் வெற்றி பெற்ற மாணவர்கள், செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தேசியக்கொடி அணிவகுப்பில் பங்கேற்க உள்ளனர்.


Next Story