50 சதவீத மானியத்தில் காட்டுப்பன்றி விரட்டும் மருந்து வினியோகம்


50 சதவீத மானியத்தில் காட்டுப்பன்றி விரட்டும் மருந்து வினியோகம்
x

புரிசை கிராமத்தில் 50 சதவீத மானியத்தில் காட்டுப்பன்றி விரட்டும் மருந்து விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.

திருவண்ணாமலை

செய்யாறு

தமிழ்நாடு அரசு வேளாண்மை உழவர் நலத்துறை 2023-24-ம் ஆண்டு வேளாண்மை துறை மானிய கோரிக்கையின் போது கரும்பு பயிர்களை சேதப்படுத்துவதை கட்டுப்படுத்த 50 சதவீத மானியத்தில் காட்டுப்பன்றி விரட்டும் மருந்து விவசாயிகளுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலை சார்பில் புரிசை கிராமத்தில் 50 சதவீத மானியத்தில் விவசாயிகளுக்கு காட்டுப்பன்றி விரட்டும் மருந்து வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பார்வதி சீனிவாசன் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏக்கள் ஒ.ஜோதி, அம்பேத்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினராக செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலை இயக்குனரும், திருவண்ணாமலை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான எம்.எஸ்.தரணிவேந்தன் கலந்து கொண்டு கரும்பு பயிரிடும் விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் காட்டுப்பன்றி விரட்டும் மருந்தை வழங்கி பேசினார்.

நிகழ்ச்சியில், செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலை இயக்குனர் லோகநாதன், ஒன்றிய கவுன்சிலர் ஞானவேல், ஊராட்சி மன்ற தலைவர் பரந்தாமன், தி.மு.க. நிர்வாகிகள் ரவிக்குமார், ராம், ரவி, செந்தில்குமார், ஆறுமுகம், வெங்கடேசன், ஒப்பந்ததாரர் கோபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story