ரேஷன் கடையில் பிளாஸ்டிக் அரிசி வினியோகம்?


ரேஷன் கடையில் பிளாஸ்டிக் அரிசி வினியோகம்?
x

அம்பை அருகே ரேஷன் கடையில் பிளாஸ்டிக் அரிசி வினியோகம் செய்யப்பட்டதாக கலெக்டரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.

திருநெல்வேலி

அம்பை அருகே உள்ள கோரைகுளம் கிராமத்தைச் சேர்ந்த முத்துலட்சுமி மற்றும் அந்த கிராமத்தைச் சேர்ந்த மக்கள் நேற்று மாவீரர் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்க தலைவர் மாரியப்ப பாண்டியன் தலைமையில் கலெக்டர் அலுவலகத்திற்கு அந்த பகுதியில் உள்ள ரேஷன் கடையில் வழங்கப்பட்ட அரிசியுடன் வந்து மனு கொடுத்தனர்.

அந்த மனுவில், "கோரைகுளம் கிராமத்தில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகிறோம். இங்குள்ள ரேஷன் கடையில் வழங்கப்படும் அரிசி தரமற்றதாக இருந்து வருகிறது. சமீபத்தில் வினியோகிக்கப்பட்ட அரிசியை சாப்பிட்ட பலருக்கு வாந்தி மயக்கம், உடல் நலக்கோளாறு ஏற்பட்டுள்ளது. அவர்கள் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று உள்ளனர். நாங்கள் அறிந்த அளவில் அந்த அரிசி, பிளாஸ்டிக் அரிசி போல் தெரிகிறது. எனவே இதுதொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை எனில் நாங்கள் ரேஷன் கார்டுகளை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபடுவோம்" என்று கூறியுள்ளனர்.


Next Story