புகையிலை பொருட்கள் குறித்து துண்டு பிரசுரம் வினியோகம்


புகையிலை பொருட்கள் குறித்து துண்டு பிரசுரம் வினியோகம்
x

ஆரணி கடைகளில் புகையிலை பொருட்கள் குறித்து துண்டு பிரசுரம் வினியோகம் செய்யப்பட்டது.

திருவண்ணாமலை

கண்ணமங்கலம்

ஆரணி வணிகர்கள்சார்பாக ஆரணி நகரத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வதில்லை என்ற துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் தலைமையில், இன்ஸ்பெக்டர் கோகுல ராஜன், சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரேசன் ஆகியோர் முன்னிலையில் வணிகர்கள் ஒருபோதும் போதை பொருட்களை விற்க மாட்டோம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

இதில் மாவட்ட தலைவர் ராஜன், நுகர்பொருள் சங்க தலைவர் ஜெயப்பிரகாஷ், அவைத்தலைவர் ராமன், செயளாலர் வணங்காமுடி, துணைத் தலைவர்கள் திருநாவுக்கரசு, அரி, துணை செயலாளர்கள் ஜெமினி செல்வம், லோகேஷ் உள்பட அனைத்து வணிகர் சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.


Next Story