அனைத்து கூட்டுறவு சங்கங்களிலும் குறுவை தொகுப்பு உரம் வினியோகம்
அனைத்து கூட்டுறவு சங்கங்களிலும் குறுவை தொகுப்பு உரம் வினியோகிக்கப் படுகிறது என்று வேளாண்மைத்துறை உதவி இயக்குனர் கூறினார்.
அனைத்து கூட்டுறவு சங்கங்களிலும் குறுவை தொகுப்பு உரம் வினியோகிக்கப் படுகிறது என்று வேளாண்மைத்துறை உதவி இயக்குனர் கூறினார்.
ஒளிபரப்பு
ராஜஸ்தான் மாநிலம், சிகார் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி 1.25 லட்சம் பிரதம மந்திரியின் விவசாய செழுமை மையங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்நிகழ்ச்சியானது தஞ்சை மாவட்டம், அம்மாப்பேட்டை ஒன்றியத்தில் உள்ள பூண்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் கிராம மக்களுக்காக நேரடியாக தொலைக்காட்சி மூலமாக ஒலிபரப்பப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு வேளாண்மைதுறை உதவி இயக்குனர் (தரக்கட்டுபாடு) கவிதா தலைமை தாங்கினார். இந்திய உழவர் உரக்கூட்டுறவு நிறுவன தஞ்சை மாவட்ட அலுவலர் சரவணன் கலந்து கொண்டு பேசினார்.
குறுவை தொகுப்பு உரம்
வேளாண்மைதுறை உதவி இயக்குனர் (தரக்கட்டுபாடு) கவிதா பேசுகையில், அனைத்து விவசாயிகளும் நானோ உரங்களை பயன்படுத்தி பயன் பெற வேண்டும். குறுவை தொகுப்பு உரங்கள் அனைத்து கூட்டுறவு சங்கங்களிலும் வினியோகிக்கப் படுகிறது. விவசாயிகள் காலம் தாழ்த்தாமல் சம்பந்தப்பட்ட கூட்டுறவு சங்கங்களில் பெற்று கொள்ள வேண்டும். என்றார்.
முடிவில் பிருத்திவிராஜ் நன்றி கூறினார். இந்த நிகழ்ச்சியில் 100 க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.