லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம்


லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம்
x

லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

விருதுநகர்


விருதுநகர் மத்திய மாவட்ட மக்கள் நீதி மய்ய செயலாளர் காளிதாஸ், மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- விருதுநகர் நகராட்சி 26-வது வார்டில் 22 நாட்களாகியும் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் குடிநீர் விலைக்கு வாங்கி குடிக்க வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளனர். அதிலும் வீடுகளில் ஆழ்துளை கிணறு இணைப்பு இல்லாத ஏழை, எளிய மக்கள் பெரும் அவதிக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த காலங்களில் குடிநீர் பிரச்சினை ஏற்படும் போது நகராட்சி நிர்வாகம் லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்து வந்தது. எனவே தற்போதும் இப்பிரச்சினையில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு குடிநீர் வினியோகம் தாமதமாகும் நிலையில் லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.


Next Story