தாமிரபரணி ஆற்றில் விநாயகர் சிலைகள் கரைப்பு
ஏரல் தாமிரபரணி ஆற்றில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டது.
ஏரல்:
இந்து முன்னணி சார்பில் ஏரல் காந்தி சிலை அருகிலும், வண்டி மuwச்சி அம்மன் கோவில் தெரு மற்றும் உமரிக்காடு, அகரம், கொற்கை, மணலூர், சூழைவாய்க்கால், சிறுத்தொண்டநல்லூர், கொத்தலரிவிளை, பண்ணைவிளை புதூர் உள்பட பகுதிகளில் 10 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பக்தர்கள் வழிபட்டு வந்தனர். இந்த நிலையில் அனைத்து விநாயகர் சிலைகளும் நேற்று ஏரல் கொண்டுவரப்பட்டது. ஏரல் பஸ் நிலையத்தில் இருந்து ஊர்வலமாக விநாயகர் சிலைகளை ஏரல் மெயின் பஜார் வழியாக கொண்டுவரப்பட்டு ஏரல் தாமிரபரணி ஆற்றில் கரைக்கப்பட்டது.
இதில் இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபாகர், ஏரல் நகர பொதுச்செயலாளர் ஆத்திப்பழம், அன்னையர் முன்னணி மாவட்ட தலைவி சந்தனகனி, மாவட்ட செயலாளர்கள் சொர்ண சுந்தரி, மகேஸ்வரி பிரபாகர் உள்பட பலர் கலந்து கொண்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை ஸ்ரீவைகுண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு மாயவன் தலைமையில் ஏரல் இன்ஸ்பெக்டர் மேரி ஜெமிதா, சப்-இன்ஸ்பெக்டர் ராஜாமணி உள்பட போலீசார் செய்திருந்தனர்.