விநாயகர் சிலை கரைப்பு- வழிமுறைகளை வெளியிட்டது மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்


விநாயகர் சிலை கரைப்பு- வழிமுறைகளை வெளியிட்டது மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்
x

கோப்புப்படம் 

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகளை கரைப்பது குறித்த வழிமுறைகளை மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டு உள்ளது.

சென்னை,

விநாயகர் சதுர்த்தி பண்டிகை நாடு முழுவதும் வரும் 31 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.

இந்த நிலையில், தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்யக்கூடிய நிலையில், நீர்நிலைகளில் விநாயகர் சிலைகளை கரைப்பது குறித்த வழிமுறைகளை மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டு உள்ளது.

அதாவது களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை மட்டும் நீர் நிலைகளில் கரைக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத மூலப்பொருட்களால் ஆன விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சிலைகளின் ஆபரணங்கள் தயாரிப்பதற்காக உலர்ந்த மலர்கள், வைக்கோல், மரங்களின் இயற்கை பிசினை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ஒருமுறை பயன்படுத்தும், தெர்மாகோலால் ஆன பொருட்களை அனுமதிக்க கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சிலைகளுக்கு வர்ணம் பூச செயற்கை ரசாயன வர்ணங்களை பயன்படுத்த கூடாது என்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. மாவட்ட நிர்வாகத்தால் அனுமதிக்கப்பட்டுள்ள நீர்நிலைகளில் மட்டுமே சிலைகளை கரைக்கவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story