கோவில் விழாவில் பட்டாசு வெடித்ததில் தகராறு: இருதரப்பினர் பயங்கர மோதல்; போலீஸ் குவிப்பு


கோவில் விழாவில் பட்டாசு வெடித்ததில் தகராறு: இருதரப்பினர் பயங்கர மோதல்; போலீஸ் குவிப்பு
x

கோவில் விழாவில் பட்டாசு வெடித்ததில் தகராறு: இருதரப்பினர் பயங்கர மோதல்; போலீஸ் குவிப்பு.

நெல்லை,

நெல்லை மாவட்டம் இடையன்குடி கல்லாம் பரம்பு பகுதியில் உள்ள முத்தாரம்மன் கோவில் கொடை விழா நடந்து வருகிறது. விழாவில் நேற்று மதியம் மஞ்சள் பெட்டி ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலமானது இடையன்குடியில் உள்ள கிறிஸ்தவ ஆலயம் அருகே வந்தபோது ஊா்வலத்தில் வந்தவர்கள் பட்டாசு வெடித்தனர். அந்த பட்டாசானது கிறிஸ்தவ ஆலய வளாகத்தில் விழுந்ததாக தெரிகிறது.

அப்போது, அங்கு நின்ற இடையன்குடியைச் சேர்ந்த ஜோபன் சாமுவேல் (வயது 35) என்பவர், ஊர்வலத்தில் வந்தவர்களிடம் தட்டிக்கேட்டார். அப்போது, அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. தொடர்ந்து இருதரப்பினரும் பயங்கரமாக மோதிக்கொண்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் ஜோபன் சாமுவேல் காயம் அடைந்தார். இதை கண்டித்து அவரது தரப்பை சேர்ந்தவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் பதற்றம் ஏற்பட்ட நிலையில், அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.


Next Story