ஆடல்-பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி கேட்ட மனுக்கள் தள்ளுபடி
ஆடல்-பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி கேட்ட மனுக்கள் தள்ளுபடி செய்து மதுைர ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்து உள்ளது.
மதுரை
மதுரை,
மதுரை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கோவில் திருவிழாக்களையொட்டி, ஆடல்-பாடல், கலை நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி கேட்டு மதுரை ஐகோர்ட்டில் ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் நீதிபதி தாரணி முன்பு விசாரணைக்கு வந்தன.
அப்போது நீதிபதி, "கோவில் திருவிழாக்கள் வழக்கம் போல் நடைபெறலாம். ஆனால் ஆடல்-பாடல், கலை நிகழ்ச்சிகளுக்கு அனுமதி தர இயலாது. அதே நேரத்தில், ஆடல்-பாடல், கலை நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி கோரிய மனுக்கள் மீதான விசாரணையை தள்ளிப்போடுவதற்கு விரும்புபவர்கள் வாய்தா பெற்றுக்கொள்ளலாம்"் என்று அவகாசம் வழங்கினார். ஆனால், பெரும்பாலானவர்கள் வாய்தா பெற விரும்பாததால் அவர்களின் மனுக்களை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story