போலீஸ் ஏட்டு பணியிடை நீக்கம்


போலீஸ் ஏட்டு பணியிடை நீக்கம்
x

சாராய விற்பனையை தடுக்க தவறிய போலீஸ் ஏட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

திருவண்ணாமலை

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து பலர் உயிரிழந்தனர். அதைத் தொடர்ந்து தமிழகத்தில் கள்ளச்சாராய் விற்பனையை தடுக்கும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டத்திலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமையில் போலீசார் சாராய வேட்டை நடத்தினர். இதில் ஏராளமானவர்கள் கைது செய்யப்பட்டனர். சாராய ஊறல்களும் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது.

இந்த நிலையில் சாராய வியாபாரிகளுக்கு காவலர்கள் சிலர் உடந்தையாக இருப்பதாகவும், விற்பனை தொடர்பாக புகார் வந்தும் அதன் மீது நடவடிக்கை எடுக்காமல் போலீசார் சிலர் செயல்பட்டதாகவும் புகார் எழுந்தது. அதன்பேரில் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் விசாரணை நடத்தினார். விசாரணையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் சாராய விற்பனையை தடுக்க தவறிய ஒரு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 5 போலீசார் சமீபத்தில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் திருவண்ணாமலை கிழக்கு போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வந்த ராஜசேகர் என்பவரையும் பணியிடை நீக்கம் செய்து அவர் உத்தரவிட்டார். இதுபோன்ற நடவடிக்கைகள் தொடரும் என்றும் மாவட்ட போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story