தேங்கி நிற்கும் கழிவுநீரால் நோய் பரவும் அபாயம்
தேங்கி நிற்கும் கழிவுநீரால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கரூர்
புன்னம் சத்திரம் பஸ் நிலையம் அருகே நெடுஞ்சாலைத்துறை சார்பாக பல கோடி ரூபாய் மதிப்பில் சாலைகள் அமைக்கப்பட்டு, சாலையின் இரு புறமும் கழிவுநீர் ெசல்ல வடிகால் கட்டப்பட்டுள்ளது. ஆனால் ஊராட்சி நிர்வாக அதிகாரிகள் அதனை சரியாக பராமரிக்காமல் விட்டு விட்டதால் தனி நபர்கள் வடிகாலின் இடையில் கான்கிரீட் மற்றும் மணலை கொட்டி வைத்து அடைத்து விடுகின்றனர். இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் தேங்கி நிற்கிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு இதனை உடனடியாக சரி செய்ய வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story