கெட்டுப்போன இறைச்சிகள் கண்டுபிடிப்பு... அதிரடி காட்டிய உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி
தென்காசி சங்கரன்கோவில் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இயங்கி வரும் பன்றி, மீன் இறைச்சிக் கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சோதனையில் ஈடுபட்டார்.
தென்காசி,
தென்காசி சங்கரன்கோவில் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இயங்கி வரும் பன்றி, மீன் இறைச்சிக் கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி முகம்மது அப்துல் கக்கீம் அதிரடி சோதனையில் ஈடுபட்டார்.
நெல்லை சாலையில் உள்ள பன்றி இறைச்சி விற்பனை கடையில் அசுத்தமாக, சுகாதாரமற்ற முறையில் கெட்டுப்போன 30 கிலோ எடையிலான பன்றி கறியையும், அதே போல் திருவேங்கடம் செல்லும் சாலை, கழுகுமலை செல்லும் சாலையில் உள்ள மீன் கடையில் 20 கிலோ எடையிலான கெட்டுப்போன மீன்களையும் பறிமுதல் செய்து அழித்தார்.
இதைத் தொடர்ந்து கெட்டுப்போன இறைச்சியை விற்பனை செய்த கடைகளுக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தார்.
Related Tags :
Next Story