பழங்கால சாமி சிலைகள் கண்டெடுப்பு


பழங்கால சாமி சிலைகள் கண்டெடுப்பு
x

காரியாபட்டி அருகே பழங்கால சாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டன.

விருதுநகர்

காரியாபட்டி,

காரியாபட்டி அருகே பாஞ்சார் கிராமத்தில் உதயகுமார் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் இருந்த சீமை கருவேல மரங்களை அந்த கிராமத்தை சேர்ந்த வாழவந்தான் மகன் முனீஸ்பாண்டி என்பவர் அகற்றினார். அப்போது பழங்கால ஒரு மண் கலயம் கிடைத்தது. அந்த மண் கலயத்தை உடைத்து பார்த்த போது பழமைவாய்ந்த சாமி சிலைகள் மற்றும் பூஜை பொருட்கள் இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து தகவலறிந்த காரியாபட்டி போலீசார் விரைந்து வந்து சிலைகளை பார்வையிட்டனர். அதில் தவிழ்ந்த நிலையில் கண்ணன், கருடாழ்வார், கிருஷ்ணன், அம்மன் போன்ற சிலைகள் மற்றும் உருண்டை சலங்கைகள், கரண்டி, மணி போன்ற பூஜை பொருட்கள் இருப்பது தெரியவந்தது. அந்த பழங்கால சாமி சிலைகள் மற்றும் பொருட்களை கைப்பற்றிய போலீசார் காரியாபட்டி தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். வருவாய்த்துறை அதிகாரிகள் சாமி சிலைகள் மற்றும் பூஜை பொருட்களை கைப்பற்றி ஐம்பொன் சிலைகளா அல்லது ஏதேனும் உலோக சிலைகளா என விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story